இந்தியாவால் ஆசிய துணைக்கண்டத்துகே அச்சுறுத்தல். அமெரிக்க பத்திரிகை குற்றச்சாட்டு
உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவி இந்தியா ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கும் அணு நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கர்நாட மாநிலத்தில் உள்ள மைசூர் அருகே இருக்கும் சல்லாக்கெர்ரே என்ற இடத்தில் இந்தியா அணு நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இதில் அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான யுரேனியம் தாது செறிவூட்டப்படுவதாகவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பத்திரிகை (foreign policy journal) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மையத்தை வரும் 2017ஆம் ஆண்டில் இருந்து செயல்பட வைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும், வீரியம்மிக்க ஹைட்ரஜன் குண்டுகள் மற்றும் அதிக வெப்பத்தை உமிழக்கூடிய தெர்மோஅணு குண்டுகளை இந்த அணு நகரத்தில் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணுஆயுத சக்தியாக உருவெடுக்க நினைக்கும் இந்தியா திட்டமிடுவதாகவும், அண்டைநாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் போட்டிப்போட்டுக் கொண்டு இதுபோன்ற அணுஆயுத கூடங்களை நிர்மானிக்க தொடங்கினால் ஆசிய துணைகண்டத்துக்கே அது அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றும் அந்த பத்திரிகை செய்தி எச்சரித்துள்ளது.
English Summary: India building top-secret nuclear city: foreign policy journal