அஜீத் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி வில்லன்
கடந்த தீபாவளி தினத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.
இந்த புதிய படத்தின் பூஜை வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி நேற்று நடைபெற்றது. ‘ஆக்சிஜன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவர் ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்களின் மூத்த மகன் ஜோதிகிருஷ்ணா இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘கேடி’, ஊ லலல்லா’ போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படம் தமிழிலும் டப் செய்யப்படும் என கூறப்படுகிறது.