சோனியாவுக்கும் ராகுலுக்கும் இன்று சிறை உறுதி. சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு தகவல்

சோனியாவுக்கும் ராகுலுக்கும் இன்று சிறை உறுதி. சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு தகவல்
sonia
இந்தியாவையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய விசாரணையில் இருவரும் ஜாமீன் கோருவார்களா? ஜாமீன் கோரினாலும் நீதிமன்றம் அனுமதி அளிக்குமா? என்று பரபரப்புடன் செய்திகள் காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “இன்று சோனியாவும், ராகுலும் சிறைக்கு செல்வது உறுதி என்றும் எனவே பிரதமர் மோடி டெல்லியில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,

முன்னதாக இந்த வழக்கை தாக்கல் செய்த சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ‘நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் இருந்தது. இந்த தொகையை காங்கிரஸ் கட்சியின் பணத்தில் இருந்து வட்டியின்றி கொடுத்து, விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடைத்தனர். அதற்கு பதிலாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

மேலும், ஹெரால்டு நிறுவனத்தின் ஒரு பகுதியை பாஸ்போர்ட் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதன்மூலம் குத்தகை நிபந்தனைகளை அவர்கள் மீறியதுடன், நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அபகரிக்க திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணை நடத்தப்படவுள்ளதால் டெல்லி பரபரப்புடன் காணப்படுகிறது.

Leave a Reply