2015ஆம் ஆண்டின் உலக அழகியாக ஸ்பெயின் இளம்பெண் தேர்வு. குவியும் வாழ்த்துக்கள்

2015ஆம் ஆண்டின் உலக அழகியாக ஸ்பெயின் இளம்பெண் தேர்வு. குவியும் வாழ்த்துக்கள்
miss world
சீனாவில் நேற்று நடைபெற்ற 2015ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில் முதன்முதலாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அழகி ஒருவர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 23 வயது மிரியா லாலகுனா ரொயா என்ற ஸ்பெயின் அழகி உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் ஸ்பெயின் நாடே விழாக்கோலத்தில் மூழ்கியுள்ளது.

சீனாவில் சான்யா நகரில் நடைபெற்ற 65வது உலக அழகி போட்டி நடைபெற்றது. மொத்தம் 114 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

2015 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா( Mireia Lalaguna Rozo) என்பவருக்கு  2014ஆம் ஆண்டு மிஸ் வோர்ல்டாக தெரிவு செய்யப்பட்ட ரொலினி(Rolene Strauss) ஸ்ட்ராஸ் மகுடத்தை சூட்டி கெளரவப்படுத்தினார்

இந்த அழகிப்போட்டியில் இரண்டாவது இடத்தை ரஷ்யாவின் சோஃபியா நிகித்சுக் அவர்களும், மூன்றாவது இடத்தை இந்தோனேஷியாவின் மரியா ஹர்ஃபண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த அழகிப்போட்டியில் சீனாவின் மனித உரிமைகள் குரித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கனடா அழகிக்கு விசா மறுக்கப்பட்டதால் அவர் இந்த போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Mireia Lalaguna Royo, a 23-year-old professional model from Barcelona, wins the beauty pageant in Sanya, China.

Leave a Reply