அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக வாதாட முன்வந்த ராம்ஜெத்மலானி.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக வாதாட முன்வந்த ராம்ஜெத்மலானி.
ramjeth
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகம் திடீரென சிபிஐ ரெய்டு செய்ததை அடுத்து தற்போது அவர் மீது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க சர்ச்சை தொடர்பாக இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி தொடர்ந்த் அவதூறு வழக்கில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த குமார் விஸ்வாஸ், அஷூதோஸ், சஞ்சய் சிங், ராகவ் சத்தா மற்றும் தீபக் பாஜ்பாயி ஆகிய 5 பேர் மீது, 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மத்திய மந்திரி அருண் ஜெட்லி அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அரவிந்த கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ராம்ஜெத்மலானி நேரில் சந்தித்து ஆலோசனை செய்ததாகவும், இந்த வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்காக  ராம்ஜெத்மலானி வாதாடுவார் என்று முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply