பன்னீர் ராஜ்மா மசாலா

butter_paneer_masala1தேவையான பொருட்கள்:

ராஜ்மா – 1 1/2 கப்
பன்னீர் – 150 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் ராஜ்மாவை போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கி, நீரை வடித்து ராஜ்மாவையும், நீரையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வதக்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் தக்காளி விழுதை சேர்த்து கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி தீயை குறைத்து, எண்ணெயும் மசாலாவும் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் பன்னீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்த ராஜ்மா நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கரம் மசாலா மற்றும் வேக வைத்துள்ள ராஜ்மா சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கவும்.

* சுவையான சத்தான பன்னீர் ராஜ்மா மசாலா ரெடி

Leave a Reply