சிங்கம் 3′ படத்தில் விஜயகாந்த் வில்லன்
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் வில்லன் நடிகரை ஹரி தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் பிரபல நடிகர் Danny Sapani, ‘சிங்கம் 3’ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘எந்திரன் 2’ படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்சயகுமார் வில்லனாக நடிக்க தேர்வு செய்யப்பட்டதைபோல, சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்திலும் மற்றொரு பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது.