1.ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
.
6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
.
11.சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற உணவு வகைகளை சாப்பிடலாம்.
.
12. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
.
13. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
.
14. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதி டரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
.
15. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
.
16. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
.
17. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தல த்தில் வாங்குவது சிறந்தது.
.
18. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
.
19. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து,ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
20. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
.
21. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்குஇதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
.
22. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழ வகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை,அர்ச்சனைத்தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்
.
23. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
.
24. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
.
25. கொடிமரத்தடியைத்தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது
.
26. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
.
27. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண் டாம்.
.
28. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
.
29. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
.
30. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்
31. பலன் முழுமையாகப் பெற <1 வருஷ காலம்> வரை ஆகலாம். {நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்}
.
32. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுஉரிய தனி யான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
33. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
.
34. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
.
35. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
.
36. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது
.
37. கோபுர தரிசனம் கோடி நன்மை.
38. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழி படுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
.
39. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார் த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
.
40. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
.
41. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
.
42. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
.
43. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
.
44. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
.
43. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1.பித்ருக்கள், 2.குல தெய்வம், 3.விநாயகர், 4.திசாநாதன், 5.பிரச்சனை அல்லது கோரி க்கை சார்ந்த தெய்வம்.
.
44. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
.
45. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும் போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.