தூத்துக்குடி-கொழும்பு இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து. பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

தூத்துக்குடி-கொழும்பு இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து. பொன் ராதாகிருஷ்ணன் தகவல்
ship
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே கடல்பாலம் மற்றும் சுரங்கப்பாதை விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் பகுதிக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

மேலும் தென்னிந்தியா மற்றும் வடஇலங்கை இடையேயான உறவுகளை ஊக்குவிக்க இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளதாக இலங்கை அரசின் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

இந்த கப்பல் சேவைகள் துவங்கப்படும் பட்சத்தில், இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு அது மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்றும் இந்திய-இலங்கை வணிகமும் பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply