குலோத்துங்கன் வழிபட்ட கூத்தனுக்கு – கோயிலும் இல்லை; கூரையும் இல்லை!

1930676_784984471606584_4050150815870930952_n

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிள்ளைப்பெருமாள்நல்லூர் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது ஐயனின் திருக்கோயில். ஐயன் அபிமுக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அன்னை அகிலாண்டேஸ்வரியுடன் திருக்காட்சி தருகிறார்.

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந் ததாகக் கருதப்படும் இந்தக் கோயிலில் உள்ள இறைவனை சூரியன் வழிபட்ட தாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

10426736_784984484939916_1244133934780862109_n

‘‘இந்தக் கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. முற்காலத்தில் மிகவும் பிரசித்தியுடன் திகழ்ந்த இந்தக் கோயில் சிதிலம் அடைந்த நிலையில், சுமார் 100 வருஷங்களுக்கு முன்பாக சிறிய அளவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. அதன் பிறகு கடந்த பல ஆண்டுகளாகவே கோயில் இந்த நிலைமையில்தான் இருக்கிறது. கடந்த 2014-ம் வருடம் பிப்ரவரி மாதம், கிராம மக்கள் மற்றும் இந்துச் சமய அறநிலையத் துறையினரின் உதவியுடன் திருப்பணிகள் செய்ய முடிவு செய்து, பாலாலயம் செய்யப்பட்டது. விரைவில் திருப்பணிகள் நிறைவு பெற ஐயன் அபிமுக்தீஸ்வரரும் அம்பிகை அகிலாண்டேஸ்வரியும்தான் அருள்புரிய வேண்டும்’’ என்கின்றனர் மக்கள்.

தென்னாடுடைய எம் ஐயனுக்கு எத்தனையோ ஆலயங்கள் பொலிவுடன் திகழ்ந்தாலும்கூட, ஐயனின் நூறு நூறு ஆலயங்கள் நிழலுக்குக் கூரையோ, ஒரு கால பூஜைக்கு வழியோ இன்றிக் காணப்படும் கோலத்தை என்னவென்று சொல்வது?

Leave a Reply