ஒருபாலின உறவு கொள்ளும் ஆண்களுக்கு முக்கிய சலுகை. அமெரிக்க அரசு அறிவிப்பு

ஒருபாலின உறவு கொள்ளும் ஆண்களுக்கு முக்கிய சலுகை. அமெரிக்க அரசு அறிவிப்பு
gay
அமெரிக்காவில் Gay என்று அழைக்கப்படும் ஒரு பாலுறவு கொள்ளும் ஆண்கள் இரத்த தானம் செய்ய தடைவிதிக்கபட்டிருந்த நிலையில் தற்போது இந்த தடை முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு பாலுறவு உறவுடன் வாழ்ந்து வரும் ஆண்கள் இரத்த தானம் செய்ய கடந்த 1983ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மிகக்கொடுமையான எய்ட்ஸ் நோய் பரவ தொடங்கிய சமயத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு ஆண்டு காலம் எந்த ஆணுடனும் பாலுறவு வைத்துக்கொள்ளாத ஆண்கள் இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

முற்றிலுமான தடை நீக்கப்பட்டாலும் இந்த புதிய விதிகள் ஒரு பாலுறவு ஆண்களுக்கு எதிராக இன்னமும் பாரபட்சம் காட்டும் விதமாகவே அமைந்துள்ளதாக ஒருபாலுறவு ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயை பரிசோதிக்கும் நவீன முறைகளில் உடனடியாக முடிவு தெரிந்துவிடுதால், அவற்றால் இரத்த தானம் பெரிதாக தாமதமாகாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் இரத்த தானம் செய்வதற்கு போதை மருந்தை உட்செலுத்திக்கொள்பவர்களுக்கும், பாலியல் தொழிலாளர்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தடை நீடிக்கும் என்றும் எஃப் டி ஏ தெரிவித்துள்ளது.

Leave a Reply