கனடா நீதிபதியாக மாறிய காரைக்குடி பெண் வள்ளியம்மை

கனடா நீதிபதியாக மாறிய காரைக்குடி பெண் வள்ளியம்மை
valliyammai
கூகுள் சுந்தர்பிச்சை உள்பட சமீப காலங்களில் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் உலகில் உள்ள பல நாடுகளில் மிக உயர்ந்த பதவிகளை பெற்று தமிழர்களுக்கு கெளரவம் சேர்த்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடா நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காரைக்குடி முன்னாள் சேர்மன் அருணாச்சலம் செட்டியார், சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம். இவரது மனைவி வள்ளியம்மை. இத்தம்பதியர் கனடாவின் வான்கூவர் நகரில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆம் ஆண்டு சட்டக் கல்வியை முடித்த வள்ளியம்மை, 1995ஆம் ஆண்டு முதல் அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

சுமார் 20 ஆண்டுகள் பல்வேறு வழக்குகளில் திறமையாக வாதாடி தனது திறமையை நிரூபித்த வள்ளியம்மை தேசிய கனடியன் பார் அசோசி யேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். அவருக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய- கனடா வர்த்தக அமைப்பின் தலைவராகவும் தேசிய அமைப்பின் இயக்குநராகவும் இவர் பணியாற்றியதால் கனடா, இந்தியா இடையே வர்த்தக உறவை மேம்பட காரணமாக இருந்தவர்

இந்நிலையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா உயர்நீதிமன்ற நீதிபதியாக வள்ளியம்மை தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணனின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English Summary: Karaikudi Woman becomes the judge of Canada highcourt

Leave a Reply