உடலுக்கு நன்மை மற்றும் தீங்கு விளைவிக்கும் உணவு காம்போக்கள்!

daily-table-350x250

ஒவ்வொரு உணவிலும் ஒருசில ஊட்டச்சத்துக்கள் இருக்கும். அவை நமது ஏதுனும் ஓர் உடல் பாகத்திற்கு நன்மை விளைவிக்கும் குணமுடையதாகவும் செயல்படும். தீயதும், தீயதும் சேர்ந்தால் தான் உடல்நலம் கெடும் என்றில்லை, சில சமயங்களில் தீயதும், நல்லதும், ஏன் நல்லதும் நல்லதும் என்ற காம்போ உணவுகள் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஒரு சில உணவுகள் ஒன்றாக சேரும் போது கெட்டுப் போய்விடும் அல்லவா, அதே போல தான் ஒருசில ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக சேரும் போது அவை ஏதேனும் ஓர் ஊட்டச்சத்து உடலில் தங்காமல் செய்துவிடுகிறது. அந்த வகையில் எந்தெந்த உணவு கலப்புகள் எல்லாம் உடலுக்கு நன்மை விளைவிக்கும், எந்தெந்த உணவு கலப்புகள் எல்லாம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை பற்றி இனிக் காணலாம்…

கொழுப்பு மற்றும் காய்கறிகள் வைட்டமின் சத்துள்ள காய்கறிகள் உடலால் நன்கு உறிஞ்சப்பட வேண்டுமானால், அதற்கு கொஞ்சம் கொழுப்பும் தேவை. ஃபிரெஷ் காய்கறிகளை சிறிதளவு எண்ணெய் அல்லது சீஸ் பயன்படுத்தி சமைத்து உண்பது உடலுக்கு நல்லது. ஆலிவ் எண்ணெய் மிகவும் சிறந்தது.

ப்ரோக்கோலி மற்றும் தக்காளி தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இருக்கின்றன, ப்ரோக்கோலியில் தாவர இரசாயன பொருட்கள் இருக்கின்றன. இந்த இரண்டு உணவுகளின் கலப்பு புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை ஆகும். மேலும் புற்றுநோய் கட்டி தாக்கம் ஏற்படாமல் காக்கவும் உதவுகிறது.

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஓர் பெரிய கிண்ணம் அளவு இரும்புச்சத்து நிறைந்த கீரையை சாப்பிடுவது உடல்நலனை ஊக்குவிக்காது. அளவாக உட்கொள்வதே சிறந்தது. வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து சாப்பிடும் போது இரும்புச்சத்து உடலுடன் எளிதாக கலந்து நன்மை விளைவிக்கிறது.

மூன்று வைட்டமின் பி சத்துக்கள் வைட்டமின் பி, வைட்டமின் பி 6, வைட்டமின் பி 12 போன்றவை சேர்த்து ஒன்றாக உண்ணும் போது உடலில் இருக்கும் அதிகளவிலான அமினோ அமிலங்கள் குறைக்கப்படுகிறது. வைட்டமின் பி மறதி மற்றும் இதய நோய்களிடம் இருந்து காக்க உதவுகிறது.

வைட்டமின் சி மற்றும் கிரீன் டீ கிரீன் டீயுடன் வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் எளிதாக உறிஞ்சப்படுகிறது. இது, உடல்வலிமை மற்றும் நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கிறது.

ஆல்கஹால் மற்றும் உணவு ஆல்கஹாலுடன் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதன் சத்துக்கள் உடலில் முழுமையாக சேராது.

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கால்சியம் சத்துள்ள உணவுடன், இரும்புச்சத்து உள்ள உணவை உட்கொள்ளும் போது, கால்சியம் 50 – 60% இரும்புச்சத்தை உடலில் சேரவிடாமல் செய்துவிடுகிறது.

ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் கால்சியம் / மெக்னீசியம் ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் கால்சியம் இரண்டும் சேரும் போது உடலில் கரையாத தன்மைக்கு மாறிவிடும். மேலும் இவை மெக்னீசியம் சத்தும் உடலில் சேராத வண்ணம் செய்துவிடுகின்றன. எனவே, இந்த உணவு கலவையை உட்கொள்ளும் போது மிக குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.

முலாம்பழம் மற்றும் பால் முலாம்பழம் விரைவில் செரிமானம் ஆகிவிடும், ஆனால், பால் சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இந்த கலவை செரிமானத்தை பாதிக்கக்கூடியவை ஆகும். வெறும் வயிற்றில் வேண்டுமானாலும் இந்த கலவையை சாப்பிடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பர்கர் மற்றும் வறுத்த உணவுகள் இந்த கலவை வளர்சிதை மாற்றத்தை சீர்குலைந்து போக செய்கிறது. மேலும் மிகவும் கொழுப்புச்சத்து உள்ள இந்த காம்போ, உடல்பருமன் மற்றும் இதய கோளாறுகள் ஏற்படுத்தும் தன்மைக் கொண்டவை.

Leave a Reply