கிறிஸ்துமஸ் கொண்டாடினால் 5 ஆண்டு சிறை. புரூனே மன்னரின் அதிரடி அறிவிப்பு

கிறிஸ்துமஸ் கொண்டாடினால் 5 ஆண்டு சிறை. புரூனே மன்னரின் அதிரடி அறிவிப்பு

bruneஉலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் புரூனே நாட்டு மன்னர் ஹசன்னால் போல்கியா. தென்சீன கடலில் உள்ள புரூனே நாட்டை ஆட்சி செய்து வரும் இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தன் நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லீம் நாடாக இருந்து வரும் புரூனே நாட்டில் கடந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மன்னரின் உத்தரவை மீறி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினால் 5 ஆண்டு சிறை தண்டனையும்  பண்டிகை கொண்டாடினால் 5 ஆண்டு சிறை தண்டனையும் 14 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மத வழியில் இருந்து விலகி செல்வதை தடுக்கவே அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடையில்லை என்றும் அவர்கள் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply