ZTE ஆக்சென் மேக்ஸ் ஸ்மார்ட்போன்

images (5)

ZTE நிறுவனம் அதன் புதிய ஆக்சென் மேக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் CNY 2,799 (சுமார் ரூ.28,600) விலையில் இ-காமர்ஸ் இணையதளம் வழியாக ஆன்லைனில் கிடைக்கும். 7.5மிமீ கொண்ட ஆக்சென் கைப்பேசிகளைவிட மெல்லிய இந்த ஸ்மார்ட்போனில் அலுமினியம்-டைட்டானியம் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பின்புற பேனலில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

டூயல் சிம் (நானோ சிம் + நானோ சிம்) ஆதரவு கொண்ட ZTE ஆக்சென் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் MiFavor 3.5 UI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குகிறது. ZTE ஆக்சென் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 367ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.0 இன்ச் முழு ஹச்டி Amoled டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 405 ஜிபியூ மற்றும் 3ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 617 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ZTE ஆக்சென் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் டிடெக்‌ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF), f/1.9 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.2 2 அபெர்ச்சர் கொண்ட 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியின் சிறப்பம்சமாக குவால்காம் குயிக் சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் கொண்ட 4140mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, 4G TDD-LTE பேண்ட் 40 மற்றும் FDD-LTE பேண்ட் 3, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, 3ஜி, 4ஜி எல்டிஇ, ஜிஎஸ்எம், யுஎஸ்பி டைப்-சி, யுஎஸ்பி OTG மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இது கோல்டு வண்ணத்தில் வருகிறது மற்றும் சிறந்த ஆடியோ வெளியீடுக்கு AK4961 24 பிட் ADC உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply