அரவிந்தசாமியை அடுத்து நயன்தாராவுக்கு அப்பாவாகும் தம்பிராமையா
ஜெயம் சகோதரர்களின் ‘தனி ஒருவன்’ திரைப்படம் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர்களுக்கு மட்டுமின்றி தம்பிராமையாவுக்கும் ஒரு முக்கிய படம். அரவிந்தசாமிக்கு தந்தையாக நடித்த தம்பிராமையாவுக்கு தற்போது அந்த படத்தின் ஹீரோயின் நயன்தாராவுக்கு தந்தையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நயன்தாரா நடித்த ‘மாயா’ என்ற திகில் படத்தை அடுத்து கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் இந்த படத்தை அவருடைய உதவியாளர் தாஸ் இயக்கவுள்ளார்.
திகில் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.