பாகிஸ்தானில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம்.
நேற்று நள்ளிரவு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லியிலும் சிறிது உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. என்றும் ஆப்கானிஸ்தானில் 196 கி.மீ ஆழத்தில் உள்ள பகுதியை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் லாகூர், செய்குபுரா, நன்கனா எஸ்சாகிப், பைசலாபாத், சர்கோதா, செய்குபுரா முல்தான், சக்வால். லோத்ரன், சியல்கோட், குஜராத், முரீ, பெஷாவர், மலாகண்ட்,சர்சடா, மன்சக்ரா, ஸ்வாட், மற்றும் தெற்கு வஜீரிஸ்தான், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறையின் இயக்குனர் ஜெனரல் குலாம் ரசூல் கூறியுள்ளார்.
டெல்லியில் உணரப்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும், ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு உண்டான இந்த நில அதிர்வு, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும், புதுடெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடஇந்திய பகுதிகளிலும் 2 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Chennai Today News: 6.2-Magnitude Earthquake Hits Northern Afghanistan and Pakistan