பாஜக தலைமைக்கு எதிராக சுப்பிரமணியசுவாமி. பெரும் பரபரப்பு
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜெட்லி தலைவராக இருந்த போது பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய பாஜக எம்.பியை பாஜக தலைமை சமீபத்தில் கீர்த்தி ஆசாத்தை சமீபத்தில் நீக்கியது. இந்நிலையில் கீர்த்தி ஆசாத் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்தது.
இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, “டெல்லி கிரிக்கெட் சங்கம் கீர்த்தி ஆசாத் மீது நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தை மட்டுமின்றி பா.ஜ.க. தலைமை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருண் ஜெட்லிக்கு ஆதரவாக பிரதமர் முதல் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்த நிலையில் சுப்பிரமணியம் சுவாமி கீர்த்தி ஆசாத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது முற்றிலும் முரண்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.