மன்னிப்பு கேட்காவிட்டால் விஜயகாந்துக்கு எதிராக போராட்டம். தமிழக ஊடகவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தபோது பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் துப்பிய விவகாரம் பெரும் பிரச்சனையாக வலுவாகியுள்ளது. தன்னுடைய அநாகரீக செயலுக்கு விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் ஊடகவியலாளர்கள் ஒருங்கிணைந்து விஜயகாந்துக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள் என்றும் தமிழக ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களை சமரசப்படுத்தும் வகையில் விஜயகாந்த் மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Chennai Today News: Tamilnadu oodagaviyalalar sangam warns to Vijayakanth