ஆனால் இன்றோ
கடமையை செய்வதற்கு
காசு கேட்கின்றார். தராதவர்கள் மீது
தரம் குறைந்த வார்த்தைகளை
அள்ளி வீசுகின்றார்
இந்த தரணியிலே
கண்ணா நீ படைத்த படைப்புக்கள்
எல்லாம் தரம் தாழ்ந்து போய்விட்டன
உன்னையும் மறந்தனர்
உன் அறிவுரைகளையும் மறந்தனர்.
இன்று அல்லல்படுகின்றனர்.
ஒழுக்கமும் இல்லை
ஒழுங்கும் இல்லை இவ்வுலகில்
வெளியிலும் புழுக்கம்
சுற்று சூழல் கெட்டதினால்
உள்ளத்திலும் புழுக்கம்
சுயநலமும் பொறாமையும்
நிறைந்து வழிவதனால்.
நீ படைத்த இந்த உலகை நீதான்
சரி செய்ய வேண்டும் ஹரியே
அனைவருக்கும்
நல்ல புத்தி பிறக்குமாறு வரம் தருவாயே.