சென்னையை அடுத்து இங்கிலாந்து நாட்டை பதம் பார்த்த கனமழை.

சென்னையை அடுத்து இங்கிலாந்து நாட்டை பதம் பார்த்த கனமழை.
flood3
சென்னையில் இம்மாத தொடக்கத்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. தற்போது சென்னை ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையை போலவே இங்கிலாந்து நாட்டில் உள்ள வடக்குப் பகுதியில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் அந்தப் பகுதியின் சாலைகள் ஆறுகளாக மாறியுள்ளன.

பிரிட்டனின் வடக்குப் பகுதியான யார்க்சயர், லங்காசயர் ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வரும் நிலையில் ஏற்கனவே கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் கனமழை பெய்ததால் சுமார் 800 ஆண்டுகள் பழமையான யார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. நதியோரத்தில் இருந்த கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இரு மாகாணங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டன் வானிலை மைய அதிகாரிகள் கூறியபோது, சில பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை கடந்த சனிக்கிழமை ஒரேநாளில் பெய்துள்ளது, இதுவே வெள்ளப் பெருக்குக்கு காரணம் என்று தெரிவித்தனர்.

கனமழையால் யார்க்ஸயர், லங்காஸயர் மாகாணங்களில் முக்கிய சாலைகள் நதிகளாக காட்சியளிக்கின்றன. ராணுவ வீரர்கள் படகுகளில் வீடு வீடாக சென்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.

சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது

Chennai Today News: UK floods: ‘Complete rethink needed’ on flood defences

flood flood1 flood2  flood4

Leave a Reply