மேக்கப் அதிகமான போட்ட சிறுமியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட பெண் நடத்துனர்
இங்கிலாந்து நாட்டில் உள்ள பேருந்து ஒன்றில் மேக்கப் அதிகமாக போட்டு பயணம் செய்த 15வயது சிறுமி ஒருவரை நடுவழியில் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தின் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் உறவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டு பேருந்து ஒன்றில் கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற 15 வயது சிறுமி, பர்மிங்காம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் இருந்த பெண் நடத்துனர், சஹ்ரா சாதிக்கின் சிறுமிகளுக்கான பயணச் சீட்டை வாங்கி பரிசோதனை செய்து
பின்னர் உன்னையும் உன் மேக் அப்பையும் பார்த்தால் சிறுமி இல்லை என தெரிகிறது என்று கூறி அந்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த சிறுமிக்கு 35 பவுண்ட் அபராதமும் விதித்துள்ளார்.
நடுவழியில் இறக்கிவிடப்பட்ட அந்த சிறுமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்தவர் சிறுமி என்பது நிரூபணம் ஆனால் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Chennai Today News: Teen girl thrown off at England bus for too much of makeup