இந்திய திரைப்படங்களில் வில்லன்களாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்கள்
கோலிவுட் திரையுலகினர் பாலிவுட் படவாய்ப்புகளையும் ஹாலிவுட் படவாய்ப்புகளையும் தேடி சென்ற காலம் போய் தற்போது ஹாலிவுட் நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ என்ற படத்தின் வில்லனாக நடிக்க முதலில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென அக்சயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மேலும் அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் மற்றொரு படமான ‘கபாலி’ படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெட்லீ’ வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு பிரபல ஹாலிவுட் நடிகரிடம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பூலோகம் படத்தில் நாதன் ஜோன்ஸ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.