63 மாடி ஸ்டார் ஓட்டலில் தீவிபத்து. துபாய் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்
இன்று பிறந்துள்ள புத்தாண்டை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 மாடி ஸ்டார் ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் துபாய் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 20-வது மாடியின் ஏற்பட்ட இந்த தீவிபத்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மேலிருந்து கீழ் வரை மளமளவென பரவி அந்த பகுதியே புகை மூட்டம் போல் காட்சி அளித்தது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று துபாய் பாதுகாப்பு துறை தலைவர் மேஜர் ஜெனரல் ரஷெத் அல்-மத்ருஷி கூறியுள்ளார். இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்றும் துபாயின் மற்ற பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது செய்த வானவேடிக்கையினால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Chennai Today News: Huge fire erupts at Dubai Star hotel