இந்து அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தை ராம.கோபாலனுக்கு யார் கொடுத்தது? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இந்து அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தை ராம.கோபாலனுக்கு யார் கொடுத்தது? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
evks
ஆலய வழிபாட்டில் ஆடை கட்டுப்பாடு விதிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு சில கருத்துக்களை கூறியுள்ள ராம.கோபாலனுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்து அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கும் வகையில் கருத்து கூறுவதற்கு ராம.கோபாலனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ”ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் வகையில் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். மேற்கத்திய கலாசார தாக்கத்தால் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஏதுவாக நள்ளிரவில் ஆலயங்களை திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும், கோவில் வழிபாட்டிற்கு செல்பவர்கள் ஆடை கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக ஜீன்ஸ், சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு ஆலயங்களுக்குள் வழிபாடு செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்கக் கூடாது என்றும் ராம.கோபாலன் கூறியிருக்கிறார். இந்து அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கும் வகையில் கருத்து கூறுவதற்கு ராம.கோபாலனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. இந்து முன்னணியின் தலைவராக இருப்பவர் எப்போது இந்து மதத்தின் தலைவராக மாறினார்?.

ஆலய வழிபாட்டிற்குச் செல்கிற ஆண்களுக்கோ, பெண்களுக்கோ உடைக் கட்டுப்பாடுகள் விதிப்பதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த உடை அணிவது, எப்படி அணிவது, எந்த மாதிரியாக அணிவது என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டுமே தவிர, அதில் மூக்கை நீட்டுவதற்கு இந்துத்வா சக்திகளுக்கு அதிகாரம் இல்லை”

இவ்வாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Chennai Today News: Who gave the authority to issue an order to Ramagopalan Hindu Endowment? EVKS Ilangovan

Leave a Reply