இசைஞானியின் 1001வது படம் ‘முத்துராமலிங்கம். ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

இசைஞானியின் 1001வது படம் ‘முத்துராமலிங்கம். ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு
1001
இசைஞானி இளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று புத்தாண்டு தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இசைஞானியின் அடுத்த படம் அதாவது 1001வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் நேற்று வெளியாகியுள்ளது.

ராஜதுரை இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ‘முத்துராமலிங்கம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. குளோபல் மீடியா ஒர்க் நிறுவனத்தின் சார்பில் விஜயபிரகாஷ் இந்த படத்தை தயாரிக்கின்றார். செந்தில்குமார் ஒளீப்பதிவு செய்யும் இந்த படத்தை ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் இளையராஜாவின் 1000வது படத்தின் டிரைலர் மற்றும் 1001வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஆகியவை வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News:Details of 1001th film of Isaignani Ilaiyaraja

Leave a Reply