சினிமா என்பது எனது தொழில் அல்ல, அது என் வாழ்க்கை. சமந்தா

சினிமா என்பது எனது தொழில் அல்ல, அது என் வாழ்க்கை. சமந்தா
samantha
கடந்த 2015ஆம் ஆண்டில் நயன்தாராவை அடுத்து அதிக ரசிகர்களால் கவரப்பட்டவர் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா நடித்த ’10 எண்றதுக்குள்ள, தங்கமகன், ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இவ்வருடம் சமந்தா நடிப்பில் ‘தெறி’, 24, பிரம்மோத்சவம் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

நடிப்பு மட்டுமின்றி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் சமூக சேவைகளையும் சமந்தா செய்து வருகிறார். இந்நிலையில் தனது பிசியான பணிகள் குறித்து சமந்தா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியபோது, ‘எப்போதும் பிசியாக இருப்பது எனக்கு பிடித்த ஒன்று. வேலையில்லாமல் வீட்டில் சும்மா இருந்தால்தான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

சினிமா மீதான என்னுடைய காதலுக்கு எல்லையே இல்லை. எனக்கு எப்போதும் படப்பிடிப்பில் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தை விட்டு வீட்டுக்கு செல்லவே பிடிக்கவில்லை. சினிமா என்பது எனது தொழில் அல்ல, அது என் வாழ்க்கை’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த உலகத்தில் என்னைவிட மிக அழகான பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கும் நிலையில் கடவுள் எனக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளார். அந்த அந்தஸ்தை நான் காப்பாற்றி கொள்வேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Chennai Today News: Cinema is not only my profession but also my life. Samantha

Leave a Reply