வெள்ள நிவாரண நிதியை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தரமுடியும். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு

வெள்ள நிவாரண நிதியை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தரமுடியும். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு

vengaiya-naiduதமிழகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணத்தொகையை மொத்தமாக தரமுடியாது என்றும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க முடியும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று இந்தியா திரும்பினார். இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிப்பு விவகாரத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மழை வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டு உடனடியாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். அதேபோல், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, நான் உள்பட பல அமைச்சர்கள் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் பேசி இருக்கிறோம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக மத்திய அரசு ராணுவம், கப்பல் படை, கடலோர காவல்படை ஆகியவற்றை அனுப்பி முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டது. மேலும், நிவாரண நிதியை ஒட்டு மொத்தமாக கொடுக்க முடியாது. பகுதி பகுதியாகத்தான் தர முடியும். வெள்ளத்தால் வீடுகள் இழந்தவர்களுக்கு மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

மீண்டும் இந்த மாதிரியான பெரும் பாதிப்புகளை தடுப்பதற்கு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி, நகராட்சி குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கும் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

Chennai Today News: We cannot give the flood relief fund totally said Vengaiah Naidu

Leave a Reply