அரசு மருத்துவர்கள் நியமனம்: ஜனவரி 5 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு மருத்துவர்கள் நியமனம்: ஜனவரி 5 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

1-doctor (1)அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 பணியிடங்களுக்கு தாற்காலிக முறையில் மருத்துவர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜனவரி 5-இல் தொடங்கி, 12 வரை நடைபெற உள்ளது.பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, முடநீக்கியல், குழந்தைகள் நலம், உளவியல், நரம்பியல், ரத்தநாள அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, இருதய அறுவைச் சிகிச்சை, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 34 துறைகளில் மருத்துவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடைபெறுகிறது. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்ட கலையரங்கத்தில் ஜனவரி 5 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  

www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply