டெல்லி மக்கள் 100 சதவீதம் அதிர்ஷ்டமானவர்கள். போலீஸ் கமிஷனர் பெருமிதம்

டெல்லி மக்கள் 100 சதவீதம் அதிர்ஷ்டமானவர்கள். போலீஸ் கமிஷனர் பெருமிதம்

delhiடெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டெல்லி காவல்துறை இல்லாதது நல்ல விஷயம் என்றும் டெல்லி காவல்துறைக்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லாமல் இருப்பதால் டெல்லி மக்கள் 100 சதவீதம் அதிர்ஷ்டமானவர்கள் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே டெல்லி காவல்துறை தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் அதிருப்தியில் இருக்கும் டெல்லி முதல்வருக்கு கமிஷனரின் கருத்து கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு கமிஷனர் பாஸி பேட்டியளித்தார். அவர் தன்னுடைய பேட்டியில் கூறியிருப்பதாவது, ” பெண்களை ஆபாச படங்களில் மட்டுமே பார்க்கிற சில ஆண்கள் நம் சமூகத்தில் இருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் 2 மாத குழந்தையானாலும் சரி, 80 வயது மூதாட்டியாக இருந்தாலும் சரி அவர்களை அதே நோக்கத்துடன் பார்க்கின்றனர். இந்திய அரசியல் சாசனம் அனுமதித்தால் பலாத்கார குற்றவாளிகளை சுட்டுக்கொல்வதோ அல்லது தூக்கிலிடுவதோ எங்களுக்கு ( காவல்துறை ) மகிழ்ச்சியானது; ஆனால் அது அவ்வாறு அனுமதிக்கவில்லை

டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டெல்லி காவல்துறை இல்லாதது நல்ல விஷயம்.  டெல்லி காவல்துறைக்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லாமல் இருப்பதால் டெல்லி மக்கள் 100 சதவீதம் அதிர்ஷ்டமானவர்கள்’ என்று பாஸி கூறியுள்ளார்.

மேலும் டெல்லி போக்குவரத்து பிரிவு போலீசார் 1000 பேருக்கு துப்பாக்கி வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறிய பாஸி, டெல்லி சாலைகளின் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் உதவுவதற்காக, போக்குவரத்து போலீசாருக்கு அடுத்த ஆண்டு ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Chennai Today News: Delhi people are 100% lucky said Delhi police commissioner

Leave a Reply