எனது அடுத்த டார்கெட் அஜித். எமிஜாக்சன் பேட்டி
ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டணம்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான எமிஜாக்சன், அதன் பின்னர் தாண்டவம், ஐ, தங்கமகன் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார். மேலும் தற்போது விஜய்யின் ‘தெறி’ மற்றும் உதயநிதியின் ‘கெத்து’ மற்றும் ரஜினியின் 2.0 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்துவிட்ட எமிஜாக்சன் தனது அடுத்த டார்கெட் அஜீத் என்றும், விரைவில் அஜித் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கவுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் 57வது படத்தை இயக்கவுள்ள சிறுத்தை சிவா, அந்த படத்தின் நாயகிகளின் பட்டியலில் எமிஜாக்சன் பெயரையும் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.