அதிபரானதும் ஐ.எஸ்., தீவிரவாதிகளின் தலையை வெட்டுவேன். டொனால்டு டிரம்ப்பின் பரபரப்பு விளம்பரம்
இஸ்லாமியர்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப், தற்போது நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயித்தவுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலையை வெட்டுவேன்’ என கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்நிலையில் அவர் லோவா மற்றும் ஹம்ப்ஷர் மாகாணத்தில் முதன்முறையாக டி.வி.விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்தில் ‘கலிபோர்னியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரம்ப் அமெரிக்காவின் அதிபரானால் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலையை வெட்டுவார். அவர்கள் வசம் உள்ள கச்சா எண்ணெய் வயல்களை கைப்பற்றுவார்’ என அந்த விளம்பர படத்தில் பின்னணி பேசப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் 30 வினாடிகள் ஒளிபரப்பாகிறது. அதற்காக ரூ. 14 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த டி.வி. விளம்பரம் அமெரிக்காவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.