பறக்கும் செல்போன் டவர்!

im10சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மூழ்கிய வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தார்கள் பல ஆயிரம் மக்கள். உறவினருடன் தொடர்பு கொள்ள செல்போன் எதுவும் வேலை செய்யவில்லை. காரணம், செல்போன் டவர்கள் எதுவும் வேலை செய்யவில்லை. டவர்களுக்குத் தேவையான மின்சாரம் இல்லை. வெளியுலகத் தொடர்புமின்றி, எந்த நேரத்தில் எவ்வளவு தண்ணீர் வந்து நம்மை மூழ்கடிக்குமோ என்று மக்கள் பரிதவித்துக் கிடந்தனர்.

மின்சாரம் இல்லையென்றாலும், எவ்வளவு வெள்ளம் வந்தாலும் வேலை செய்யும்வகையில் கூகுள் நிறுவனம் புராஜக்ட் லூன் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது.

மலைப்பிரதேசங்கள், மற்றும் செல்போன் டவர்கள் அமைக்க முடியாத இடங்களில் செல்போன் தொடர்பு கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இக்குறைபாட்டையும் நீக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த புராஜக்ட் லூன். அதாவது 12 மீட்டர் உயரம், 15 மீட்டர் அகலம் அளவிலான காற்று நிரம்பிய பலூனைப் பறக்கச் செய்து அதன் மூலம் செல்லிடப்பேசி அலைக்கற்றைகளை அளிப்பதுதான் புராஜக்ட் லூன் திட்டம்.

இந்த பலூனில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தகடு மூலம் மின்னாற்றல் பெற்று இதில் பொருத்தப்பட்டுள்ள இணைய இணைப்பு வழங்கும் தொழில்நுட்பம் இயக்கப்படும்.

தரைப்பகுதியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பறக்கவிடப்படும் இந்த பலூன் மூலம் 40 கிலோமீட்டர் சுற்றளவிற்கு இணைய தொடர்பைப் பெற முடியும். எதிர்பாராத இயற்கை பேரிடர் காலங்களில் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவேதான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் புராஜக்ட் லூன் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து 2.6 ஜிகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

மேலும் தற்போது 3ஜி சேவை மூலம் கிடைக்கும் 2 எம்பிபிஎஸ் (ம்க்ஷல்ள் – ஙங்ஞ்ஹக்ஷண்ற்ள் டங்ழ் நங்ஸ்ரீர்ய்க்) இணையச்சேவை வேகத்தை விட 10 எம்பிபிஎஸ் இணையச் சேவை வேகத்தை புராஜக்ட் லூன் திட்டம் மூலம் அளிக்க முடியும். ஏற்கெனவே நியூஸிலாந்து, கலிபோர்னியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம். விரைவில் நமது நாட்டிலும் கூகுளின் புராஜக்ட் லூனை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply