புரோட்டீன் லட்டு

protein ladduதேவையானவை: முளைவிட்ட கேழ்வரகின் மாவு – கால் கிலோ, வறுத்த எள், வறுத்த வேர்க்கடலை – தலா 100 கிராம், சோயா மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், வெல்லம் – கால் கிலோ.

செய்முறை: கேழ்வரகு மாவை பொன்னிறமாக கடாயில் வறுத்து எடுத்து, சிறிதளவு நீர் தெளித்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி, எள்ளுடன் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய் விட்டு சோயா மாவை பொன்னிறமாக வறுத்து, வேகவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, பொடித்த எள் – வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். வெல்லத்துடன் நீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி கடாயில் சேர்த்து இளம்பாகு வைத்துக்கொள்ளவும். பாகில் மாவை சேர்த்துக் கலந்து, மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி இறக்கி வைத்து, உருண்டைகளாகச் செய்தால்… புரோட்டீன் லட்டு

Leave a Reply