தன்னம்பிக்’கை’ இருப்பதால் நாமும் கடவுளே!

selfஇறைவன் பல கரங்கள் தாங்கி நின்று, கைக்கு ஓர் ஆயுதம் ஏந்தி, காரியங்கள் அனைத்தையும் சுபமாக முடிக்கிறான். நாமும் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் வெற்றியுடன் முடிக்க, அவன் அளித்திருக்கும் கையே, தன்னம்பிக்கை. அந்த வகையில், தன்னம்பிக்‘கை’ உள்ள நாமும், நினைத்ததை நடத்தி முடிக்கவல்ல கடவுளே!

தன்னம்பிக்கை, வாழ்வின் பெரும் சிறகு. கால்கள் தளர்ந்தபோதும், கீழே விழாமல் நம்மை உயரப் பறக்க வைக்கும் வாழ்வாதாரம் அது. அந்தத் தன்னம்பிக்கையை, நாளும் பொழுதும் வளர்த்தெடுக்க வேண்டியது நம் பொறுப்பு. இல்லையெனில், நம்மை வீழ்த்தக் காத்திருப்போரிடம் இருந்து மீண்டு சிகரம் தொட முடியாது.

பெண்கள், இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பல இடையூறுகளில் இருந்து போராடி வேகமாக முன்னேறுகிறார்கள். அந்த முயற்சியில் சிலர் சொல்பேச்சை கேளாதவர், திமிர் பிடித்தவர் என்று சாடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, சிறகுகள் முடங்கக் கூடாது. மாறாக, இன்னும் வேகமெடுத்து, அவதூறுகளைப் புறந்தள்ளி, இலக்கை அடைய வேண்டும்!’’

– முன்னணிப் பட்டிமன்றப் பேச்சாளர், தன்முனைப்பு பேச்சு மற்றும் இலக்கிய சொற்பொழிவுகளில் பெரும்பாங்காற்றி வருபவர், சென்னை, `ஜெபிஏஎஸ்’ (JBAS) மகளிர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் டாக்டர் இ.ச.பர்வீன் சுல்தானா, பெண்களின் தன்னம்பிக்கைத் திரியைத் தூண்டினார்.

 தன்னம்பிக்கை இருந்தால் கடும் துன்பத்திலும் நிதானமாகச் செயல்படலாம்.

 ஒரு பெண் உலகினை சந்திக்கத் தேவையான தன்னம்பிக்கை… தன் கற்றல், கேட்டலை சரியாகப் பயன்படுத்தினால் வளரும்.

 நம்மிடம் இருப்பது தன்னம்பிக்கையா அல்லது தவறான நம்பிக்கையா என்று பிரித்தறியத் தெரிய வேண்டும்.

 உடலினை உறுதி செய்து தன்னம்பிக்கை பெறுவோம்.

 தனித்துவத்தோடு துணிவையும் வளர்த்தால் தனித்துவத்தோடு சிறப்பும் அடையலாம்.

 சுதந்திரம் இல்லாமல் செயல்பட்டோ, அதீத சுதந்திரத்தோடு செயல்பட்டோ தன்னம்பிக்கை இழக்க வேண்டாம்.

 மனதில் உறுதியை வளர்த்து இலக்கை அடைந்திடலாம்.

– இப்படி ஏழு நாட்களிலும், இந்த ஏழு தலைப்புகளில் அவள் வாசகிகளுடன் பேசவிருக்கிறார். 044 – 66802912* எண்ணில் ஜனவரி 5 முதல் 11 வரை அழையுங்கள்… தளராத மன உறுதியை உருவாக்கிக்கொள்ளுங்கள்!

Leave a Reply