கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பீட்சா, ஜிகர்தண்டா என்ற இரண்டே வெற்றி படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினி, விஜய் ஆகியோர்களின் அடுத்த படத்தை இயக்கும் பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இயக்கி முடித்துள்ள ‘இறைவி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக அமைந்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இறைவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் “சில WOMENகளின் கதை” என்ற சப்டைட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தின் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவமான வேடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டீசர் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Today News: Iraivi title design poster. First look teaser coming on Jan 8th!!