விவசாய நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்தது ஏன்? அமலாக்கப்பிரிவு வாதம்

விவசாய நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்தது ஏன்? அமலாக்கப்பிரிவு வாதம்

kalaingartv2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி பணபரிமாற்றம் நடந்தது குறித்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பியும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி அமலாக்கப்பிரிவு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஓ.பி.சைனி முன் அமலாக்கப்பிரிவு சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி வாதாடியபோது, ‘டிபி குரூப் நிறுவனம் வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியுள்ளது. இது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு கைமாறாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வர்த்தகம் எதிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.

கலைஞர் டிவி-க்கு முறையற்ற வழியில் பணத்தை கொடுக்கவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணபரிமாற்றம் நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல. ஒரு விவசாய நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணம் தர வேண்டிய அவசியம் இல்லை. எதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் இல்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த பிணை உத்தரவாதமும் காட்டப்படவில்லை. கணக்குகள் அனைத்தும் மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளன’ என்று வாதிட்டார்

Chennai Today News: Rs 200-crore illegal gratification transferred to Kalaignar TV

Leave a Reply