சூர்யா-ஹரியின் ‘சிங்கம் 3’ படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு

சூர்யா-ஹரியின் ‘சிங்கம் 3’ படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு
singam 3
ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் சூப்பர் ஹிட்டை அடுத்து இதன் அடுத்த பாகமான சிங்கம் 3′ படத்தின் படப்பிடிப்பு இன்று விசாகப்பட்டிணத்தில் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு தற்போது ‘S3’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ‘எந்திரன் 2’ படத்திற்கு ‘2.0’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள பாணியில் ‘S3’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த டைட்டிலால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் கடைசி நேரத்தில் டைட்டில் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

சர்வதேச போலீஸ் அதிகாரியாக சூர்யா நடிக்கும் இந்த படத்தில் அனுஷ்கா அவருடைய மனைவியாக நடிக்கின்றார். மேலும் சிபிஐ அதிகாரியாக ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு என்று கூறப்படுகிறது.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். ஹரியின் படங்கள் எப்போதுமே திட்டமிட்டவாறு முடிக்கப்படும் என்பதால் இந்த படமும் அதேபோல் விரைவில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

Chennai Today News: The title of Surya and Hari movie is announced

singam 3 3  singam 31 singam 32

Leave a Reply