அனுமார் வடை

vadaiஎன்னென்ன தேவை?

உளுந்து – ஒரு கப்

மிளகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உளுத்தம் பருப்பைச் சுத்தம் செய்து, பத்து நிமிடம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிடுங்கள். ஊறிய உளுந்துடன் சிறிதளவு உப்பு கலந்துவையுங்கள். ஐந்து நிமிடம் கழித்துப் பார்த்தால் தண்ணீர்விட்டிருக்கும். அந்தத் தண்ணீரையும் வடித்து, கொரகொரப்பாக அரைத்தெடுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து, மாவில் சேர்த்துக் கலக்குங்கள். மாவில் சிறிது எடுத்து ஈரத் துணியில் வடைகளாகத் தட்டுங்கள்.

தட்டிய வடைகளைச் சூடான எண்ணெயில் போட்டு வேகவிடுங்கள். இருபுறமும் நன்றாக வெந்ததும் எண்ணெய் வடித்தெடுங்கள்.

Leave a Reply