ஏரியை ஆக்கிரமித்த தேமுதிக எம்.எல்.ஏ. விஜயகாந்த் அதிர்ச்சி
சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் தமிழகம் பெரும் சேதத்தை சந்தித்த நிலையில் இந்த சேதத்துக்கு காரணம் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததுதான் என தேமுதிக தலைவர் கடந்த சில நாட்களாக முழங்கி வருகிறார். இந்நிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ ஒருவரே ஏரியை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்றதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் விஜயகாந்த் உள்பட தேமுதிக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் நேற்று ஏரி மீட்பு போராட்டம் நடைபெற்றாது. இங்குள்ள ‘இஸ்மாயில்கான் ஏரி’ நிலம் மீட்புக்கான ‘உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்த அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஸ்பாட்டுக்கு வந்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கம்பொல் தெரிவித்தனர். போராட்டக்காரர்களிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், ஆர்.டி.ஓ, போலீஸ் உதவி கமிஷனர் விஜய கார்த்திக்ராஜா, அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் என்று அத்தனை அரசு அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த பு. மொழி கூறும்போது, “ஏரியின் கரைகளில் செழிப்பாக வளர்ந்திருந்த பனை மரங்களை அடியோடு வெட்டியெடுத்து விற்றுள்ளனர். ஏரியில் இருந்த பாறைகளையும் அதேபோல் வெட்டியெடுத்து விற்றுள்ளனர். கடைசியில் 6.55 ஹெக்டேர் நிலபரப்பு கொண்ட ஏரிபரப்பில் இருந்து 6 ஏக்கர் 89 சென்ட் அளவு நிலத்தை ஆக்கிரமித்து, தனியார்களுக்கு விற்று விட்டனர்.
இப்போது அந்த நிலங்கள் கோவிந்தன் என்பவர் பெயரில் பட்டா போடப்பட்டு, அவர் மூலமாக, தனித்தனி நபர்களுக்கு பிளாட் போட்டு விற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தேமுதிக எம்.எல்.ஏ வும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான அழகாபுரம் மோகன்ராஜ் இருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவர் மீது நடவடிக்கை எடுங்கள், ஏரியை மீட்டுக் கொடுங்கள் என்று போலீசுக்கும் போய் புகார் கொடுத்து விட்டோம், கோர்ட்டுக்கும் போய் விட்டோம், நடவடிக்கைதான் இல்லை… ” என்றார்.
ஆறு, ஏரி, நீர்-நிலைகளை மீட்கும் களப்பணியில் சர்வ கட்சிகளும் இறங்கியிருக்கும் நேரம் இது. நீர் நிலைகளின் வழித்தடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீரவேண்டும் என்கிறது கோர்ட்டின் உத்தரவு.
திமுக, அதிமுகவை ஏரி ஆக்கிரமிப்பு குறித்து குற்றம் சொல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ மீது கடும் நடவடிக்கை எட்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Chennai Today News: DMDK MLA encroachment of lake at Salem. Vijayakanth shocked