அல்லாஹூ அக்பர்’ என்று கோஷமிட்டு வந்த மர்ம நபரை சுட்டு கொலை செய்த பாரீஸ் போலீஸ்

அல்லாஹூ அக்பர்’ என்று கோஷமிட்டு வந்த மர்ம நபரை சுட்டு கொலை செய்த பாரீஸ் போலீஸ்

Man with knife, shouting “Allahu akbar,” shot dead after trying to enter a Paris police station, official says

paris 2

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து அந்நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் அதே பாரீஸ் நகரில் கத்தியுடன் காவல்நிலையம் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து ‘அல்லாஹூ அக்பர்’ என்று கோஷமிட்டபடி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர் தனது உடலில் தற்கொலை வெடிகுண்டு பெல்ட் கட்டியிருக்கலாம் என்று சந்தேகம் கொண்ட பாரீஸ் காவல்துறை அதிகாரிகள், உள்ளே நுழைந்த மர்ம நபரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பாரிஸ் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தாக்குதலுக்கான பெல்ட் போன்று ஏதோ ஒன்று அடையாள தெரியாத அந்த மனிதரின் சட்டைக்குள் துருத்திக் கொண்டிருந்ததாக பிரான்சின் உள்துறை அமைச்சர் பெய்ர்ரி ஹென்றி கூறினார். பாரிசின் வடக்கு பகுதியில் உள்ள 18-வது மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பலியான நபர் யார்? எங்கிருந்து வந்தார் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக பாரீஸ் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

Chennai Today News: Man with knife, shouting “Allahu akbar,” shot dead after trying to enter a Paris police station, official says

 paris 5 paris paris1 paris3 paris4

Leave a Reply