வடகொரியாவின் ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனைக்கு பாகிஸ்தான் காரணமா?

வடகொரியாவின் ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனைக்கு பாகிஸ்தான் காரணமா?
north korea
வடகொரியா சமீபத்தில் ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வடகொரியாவுக்கு ஹைட்ரஜன் அணுகுண்டுத் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் விற்றிருக்கலாம் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், நிபுணர்களும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் தலைமையிலான ஒரு குழு உலகின் பல நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில் நுட்பத்தை விற்பனை செய்துள்ளதாக நம்பப்படுவதாகவும், வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடங்குவதற்கும், தொடர்ந்து நடைபெறுவதற்கும் ஏ.க்யூ. கான் குழுதான் காரணம் என்றும் அமெரிக்காவில் உள்ள பயங்கரவாதம், அணு ஆயுதப் பரவல் தடுப்புக்கான நாடாளுமன்றத் துணைக் குழுவின் தலைவர் டெட்போ சந்தேகம் அடைந்துள்ளார்.

எனவே நேற்று முன்தினம் வடகொரியா பரிசோதனை செய்த ஹைட்ரஜன் அணுகுண்டுக்கு பாகிஸ்தானே முழு காரணம் என்றும், வடகொரியாவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் பாகிஸ்தான் மீதும் எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசியல் தலைவர்களும் விஞ்ஞானிகளும் கருத்து கூறிவருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை பாகிஸ்தான் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

North Korea nuclear test: A cancer that spread from Pakistan

Leave a Reply