திமுகவின் ஊழலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பட்டியல் இடாதது ஏன்?

திமுகவின் ஊழலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பட்டியல் இடாதது ஏன்?
vasuki
தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சி செய்து ஊழல் செய்து வரும் நிலையில் அதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்ட காங்கிரஸ் கட்சி திமுகவின் ஊழலை பட்டியல் இடாதது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அதிமுக அரசு செய்த 25 ஊழல்களை பட்டியலிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, ‘அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக தமிழகத்தில் மாற்று அணியாக மக்கள் நலக்கூட்டணி இருப்பதாகவும், அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி திமுக தொடர்பான ஊழல் பட்டியலை மட்டும் வெளியிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுகவை குஷிப்படுத்தவே அதிமுகவின் ஊழல் பட்டியலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Chennai Today News: Why EVKS Ilangovan not listed DMK’s corruption

Leave a Reply