அஜித்தை அரசியலுக்கு திட்டமா? விரைவில் அஜித்-மோடி சந்திப்பு?

அஜித்தை அரசியலுக்கு திட்டமா? விரைவில் அஜித்-மோடி சந்திப்பு?
ajith
modiகடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ரஜினி, விஜய்யை வளைத்து போட்ட பாரதிய ஜனதா கட்சி வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அஜித்துக்கு வலைவிரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்துக்கு பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் வேட்பாளர் மோடி, ரஜினி மற்றும் விஜய்யை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்டார். இருப்பினும் இந்தியா முழுவதும் மோடி அலை வெற்றியை தந்த நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில் வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அஜித்தை கட்சியில் இழுக்க திட்டமிட்டுள்ளது. அஜித்தை பாஜகவில் சேரும்படி பாஜக மேலிடம் வலியுறுத்தி வருவதாகவும் இதற்காக பிரதமர் மோடி விரைவில் அஜித்தை சந்திக்க திட்டமிட்டுருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அஜித் தரப்பில் இருந்து இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல அரசியல் கட்சிகள் அஜித்தை தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுப்பது உண்மைதான் என்றும், ஆனால் அஜித் தற்போது எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், அவர் எந்த பிரமுகர்களையும் சந்திக்கும் திட்டத்தில் இல்லை என்றும் அஜித் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Chennai Today News: Will Ajith joins BJP?

Leave a Reply