தற்போதைய தமிழ்நாடு சட்டமன்றம் முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடராக கருதப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. இம்மேலவையின் ஆயுள் மூன்றாண்டுகளாக முடிவு செய்யப்பட்டது. மேலவையில் 132 உறுப்பினர்கள் இருந்தனர். அவற்றில் 34 உறுப்பினர்கள் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இம்மன்றத்தின் முதல் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் கூடியது. இதன் தொடக்க விழா இங்கிலாந்து கோமகன் கனாட் அவர்களால், அப்பொழுதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் தொடங்கி வைக்கப்பட்டது.