$400 கோடி சொத்து மதிப்புள்ள சீன தொழிலதிபர் திடீர் மாயம். பெரும் பரபரப்பு

$400 கோடி சொத்து மதிப்புள்ள சீன தொழிலதிபர் திடீர் மாயம். பெரும் பரபரப்பு
china
கடந்த மாதம் சீன தொழிலதிபர் குவோ குவங்ச்சங் என்பவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர் எங்கிருக்கின்றார் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சீன போலீஸார் தனிப்படை அமைத்து அவரை தேடி வரும் நிலையில் நேற்று இன்னொரு முக்கிய தொழிலதிபரும் காணாமல் போயுள்ளார். இதனால் சீனாவில் தொழிலதிபர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் மிகப் பிரபலமான ஆடையலங்கார நிறுவனமான மீட்டர்ஸ்போன்வே என்ற நிறுவனத்தை தோற்றுவித்து இன்று சீனாவின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றிய பெரும்பணக்காரர் ஸூ செங்ஜியன் என்பவர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாருடைய உதவியும் இன்றி தனது திறமை மற்றும் அபாரமான உழைப்பினால் முன்னேறியவரான தொழிலதிபர் ஸூவின் சொத்து மதிப்பு சுமார் நானூறு கோடி டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸூ செங்ஜியன் அவர்களை நேற்று முதல் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் அவரது பங்குகளில் வர்த்தகம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக மீட்டர்ஸ்போன்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து தொழிலதிபர்கள் காணாமல் போவதில் தீவிரவாதிகள் சதிவேலை இருக்குமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Chennai Today News: Chinese billionaire Zhou Chengjian goes missing

Leave a Reply