திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே கடல்வழி பாலம். மத்திய அமைச்சர் தகவல்

 திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே கடல்வழி பாலம். மத்திய அமைச்சர் தகவல்
kanyakumari
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியின் முக்கிய அடையாளமான விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை, விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ”குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே கடல்வழி பாலம் அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஒரு விமான நிலையத்துக்கும், இன்னொரு விமான நிலையத்துக்கும் இடையே 150 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் குமரி மாவட்டத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விமான நிலையம் உள்ளது.

ஆனாலும், கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாதலமாக உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இங்கு விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்ய இருக்கிறேன். சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் விமான நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு பணிகளும் முடிவடைந்துள்ளன. ஆன்மிக தலங்களான வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்படும். விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

Chennai today News: Bridge between vivekananda rock and Tiruvalluvar statue

Leave a Reply