விக்ரம்-நயன்தாரா நடிக்கும் படத்தின் டைட்டில் ‘இருமுகம்’
விக்ரம் நடிப்பில் ‘அரிமாநம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியதை அடுத்து நேற்று நள்ளிரவு 12மணிக்கு இந்த படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடிப்பதால் இந்த படத்திற்கு ‘இருமுகம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் ஆனந்த்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
‘இருமுகம்’ படத்தில் முதல்முறையாக விக்ரமிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ‘ஓகே கண்மணி’ நாயகி நித்யாமேனன் நடிக்கவுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.
‘இருமுகம்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கே வித்தியாசமாகவும், விஞ்ஞான கலந்ததாகவும் உள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் நடைபெறவுள்ளது.
Chennai Today News: Irumugam is the title of Vikram-Nayanthara movie