வயதான காலத்தில் எலும்பு பிரச்சனைகள் வராமலிருக்க, இளம் வயதில் இருந்தே எலும்புகளுக்கு பாதுகாப்பு மற்றும் வலிமையளிக்கும் செயல்களில் ஈடுபட்டு வர வேண்டும். சரி, இப்போது எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்க்கலாம்.
எலும்புகளின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கால்சியம் மிகவும் இன்றியமையாதது.
கால்சியம் உடலில் எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவு நோய்க்கு உள்ளாகக்கூடும். எனவே சிறு வயதில் இருந்தே கால்சியம் நிறைந்த உணவுகளான பால் பொருட்கள், கீரைகள், ப்ராக்கோலி, கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம்.
தினமும் காலையில் 10-15 நிமிடம் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு வாக்கிங் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்களில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய வைட்டமின் டி ஏராளமாக நிறைந்துள்ளது.
ஆகவே வைட்டமின் டி சத்தைப் பெற உணவுப் பொருட்களை உண்பதோடு, சூரியக்கதிர்கள் படுமாறு வாக்கிங் அதிகாலையில் செல்ல வேண்டியது அவசியம்.
உப்பை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால், சிறுநீரகத்தின் வழியே உடலில் உள்ள கால்சியம் சத்தானது வெளியேற்றப்பட்டுவிடும். கால்சியம் வெளியேறிவிட்டால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே உணவில் உப்பு சேர்ப்பதை வயது அதிகரிக்க அதிகரிக்க குறைத்து வர வேண்டும்.
சோடாவை அதிகம் குடிக்கும் போது, இரத்தத்தில் பாஸ்பேட்டுகளின் அளவு அதிகரித்து, அதனால் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறி, சிறுநீரில் கால்சியத்தின் அளவு அதிகரித்துவிடும். மேலும் சோடா பானங்களில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பவை.
எனவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சோடா பானங்களைத் தவிர்த்திடுங்கள்.
ஒரு நாளைக்கு 2 கப் காபிக்கு மேல் குடிக்க வேண்டாம். இல்லாவிட்டால் எலும்புகளின் வலிமையை இழந்து, கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும்.
தினமும் உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, எலும்புகளும் நல்ல வலிமையையும், உறுதியையும் பெறும். ஆகவே உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்பட நினைத்தால், தினமும் சிறு உடற்பயிற்சியையாவது செய்து வாருங்கள்.