மேஷம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்க்ள. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி குணங்கள்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
ராசி குணங்கள்
கடகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்
ராசி குணங்கள்
சிம்மம்
பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி குணங்கள்
துலாம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
ராசி குணங்கள்
விருச்சிகம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி குணங்கள்
கும்பம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முன்கோபத்தால் பகை உண்டாகும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி குணங்கள்
மீனம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்